சினிமா
பட வாய்ப்பு என்ற பெயரில் மோசடி செய்த இயக்குநர்..! வெளியான நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
பட வாய்ப்பு என்ற பெயரில் மோசடி செய்த இயக்குநர்..! வெளியான நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
கும்பமேளாவில் வைரலான பெண்ணை வைத்து படம் எடுக்கப் போவதாகக் கூறிய இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, படவாய்ப்பு கேட்டு வந்த வேறொரு பெண்ணிடம் பாலியல் வன்முறை நடத்தியதாக பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற கும்பமேளா விழாவில், மோனாலிசா என அழைக்கப்படும் ஒரு இளம் பெண், அங்கு எடுத்த புகைப்படம் மற்றும் தோற்றம் காரணமாக சமூக வலைத்தளங்களில் மிகுந்த அளவில் வைரலானார். அவரை வைத்து படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதைத் தொடர்ந்து, சினிமா வாய்ப்புகள் குறித்து பலர் அவரிடம் தொடர்புகொண்டதாகவும் கூறப்பட்டது.அத்தகைய சனோஜ் மிஸ்ரா, மோனாலிசாவை வைத்து படம் எடுக்கவிருப்பதாக பேசி வந்தபோது, வேறு ஒரு இளம் பெண்ணிடம் நடிக்க வாய்ப்புத் தருவதாகக் கூறி, அவளிடம் பழகியுள்ளார். அந்த பெண்ணை தனிப்பட்ட சந்திப்பிற்கு அழைத்துச் சென்ற சனோஜ், அந்த இடத்தில் அவளிடம் பாலியல் வன்முறை நிகழ்த்தியுள்ளார் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.