சினிமா

விஜய் டிவி என்றாலே பிரச்சனை தான்.. VJ மணிமேகலை பேச்சால் ஆடிபோன அரங்கம்

Published

on

விஜய் டிவி என்றாலே பிரச்சனை தான்.. VJ மணிமேகலை பேச்சால் ஆடிபோன அரங்கம்

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் VJ மணிமேகலை. இவருக்கு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி ஷோ நல்ல வரவேற்பை மக்களிடையே ஏற்படுத்தி கொடுத்தது.கோமாளியாக மக்களை தொடர்ந்து மகிழ்வித்து வந்த மணிமேகலை, குக் வித் கோமாளி சீசன் 5ல் தொகுப்பாளினியாக வந்தார். இதன்பின் நடந்த சில பிரச்சனைகள் காரணமாக விஜய் டிவியில் இருந்து வெளியேறினார்.இவருடைய வெளியேற்றத்திற்கு தொகுப்பாளினி பிரியங்கா தான் காரணம் என ரசிகர்களிடையே கிசுகிசுக்கப்பட்டது. விஜய் டிவியில் இருந்து வெளியேறிய VJ மணிமேகலை ஜீ தமிழில் என்ட்ரி கொடுத்தார்.அதாவது, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய்யுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில், மணிமேகலை மேடையில் உளறிய சில வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜய் டீம் என்றாலே பிரச்சனை தான் என்று சொல்வதற்கு பதிலாக “இந்த விஜய் டிவி என்றாலே பிரச்சனை தான் என்று கூறியுள்ளார்.தற்போது, இதை கண்டு ரசிகர்கள் மணிமேகலை விஜய் டிவி மீது உள்ள கோபத்தை மேடையில் உளறிவிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version