கிசு கிசு

ஸ்டைலிஷ் நடிகை துஷாரா விஜயன் காதலிக்கின்றாரா..!யாரும் அறிந்திடாத உண்மை இதோ!

Published

on

ஸ்டைலிஷ் நடிகை துஷாரா விஜயன் காதலிக்கின்றாரா..!யாரும் அறிந்திடாத உண்மை இதோ!

நடிகை துஷாரா விஜயன், ‘சர்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பெரும் கவனத்தைப் பெற்றவர். அந்தப் படத்தில் அவரது கதாப்பாத்திரம் மிகவும் சிறப்பாக காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘வீர தீர சூரன்’ படத்திலும் தனது திறமையைக் காட்டியுள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட துஷாரா விஜயன் தனது திருமணத்தைப் பற்றிய எண்ணங்களை மனம் திறந்து கதைத்துள்ளார். தனது வாழ்க்கைப் பாதையை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் இளம் நடிகையான துஷாராவின் கருத்துக்கள் ரசிகர்களிடையே எதிர்பாராத விதமான உணர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.அதன்போது நடிகை துஷாரா, திருமண வாழ்க்கை பற்றிய கேள்விக்கு  அழகாகப் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நான் ஒரு காலத்தில் திருமணம் வாழ்க்கைக்கு தேவையில்லை என்று நினைத்தேன். மேலும் என் கனவுகளை மட்டும் முன்னேற்றி வாழனும் என்பது தான் எனது திட்டமாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.இது இன்றைய தலைமுறையில் உள்ள பல இளம் பெண்களின் எண்ணத்தைக் குறிக்கும் பிரதிபலிப்பாக காணப்படுகின்றது. எனினும் துஷாரா தற்பொழுது அந்த முடிவினை மாற்றிவிட்டு திருமண வாழ்க்கையை தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்ட நடுவர் “அப்ப லவ் இருக்குப் போலயே..!” என்று கூறியிருந்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version