சினிமா

‘Good Bad Ugly’ படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு…!

Published

on

‘Good Bad Ugly’ படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு…!

ஆதிக் ரவி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் “good bad ugly ” திரைப்படம் அஜித் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகின்றது. இந்த படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதுடன் அஜித்துடன் இணைந்து திரிஷா ,பிரபு ,ஜோகிபாபு ,பிரசன்னா ,அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கொடூர வில்லனாக அர்ஜுன்தாஸ் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மற்றும் அஜித் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இப் படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். நேற்று இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியிருந்தது. இந்த பாடலிற்கு ஜிவி இசையமைத்துள்ளதுடன் பாடலினை அனிருத் மற்றும் பால் டப்பா இணைந்து பாடியுள்ளனர். இந்த படத்தினை ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியிடுவதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது. மேலும் படத்திற்கான இசைப்பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதுடன் படத்தின் trailor ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version