சினிமா
இளையராஜா இப்படி எல்லாம் துன்பப்பட்டாரா…? கேட்கவே கஷ்டமா இருக்கே..!
இளையராஜா இப்படி எல்லாம் துன்பப்பட்டாரா…? கேட்கவே கஷ்டமா இருக்கே..!
தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களை இசையால் கவர்ந்து இசைஞானி என அழைக்கப்படும் இசைப்புயல் இளையராஜா அவர்கள், சமீபத்தில் நிகழ்ந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு, தன் இசை வாழ்க்கையின் ஆரம்பகால அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.அந்த உரையில் அவர் கூறிய சில வரிகள் இசையின் மேன்மை மற்றும் ஒரு கலைஞரின் சிரமம் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் காணப்படுகின்றது. இளையராஜா தனது பேச்சின் ஒரு பகுதியில், தங்கள் குடும்பம் எப்படி இசைக்காக தியாகம் செய்தது என்பதை உணர்ச்சி பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது,”நாங்க சென்னைக்கு வந்த போது, எங்க வீட்டில இருந்த ரேடியோவை விற்று 400 ரூபா பணம் பெற்றோம். அதில இருந்து தான் எனது இசைப் பயணம் ஆரம்பிச்சது” என இளையராஜா கூறியுள்ளார். மேலும் இசை தான் அவரது வாழ்க்கைக்கு அடையாளமாக இருந்தது எனவும் தெரிவித்தார்.இளையராஜாவின் இந்த உரை பல இளைஞர்களுக்கு ஊக்கமும் முன்னேற்றமும் அளிக்கக்கூடிய வகையில் காணப்பட்டது. குறிப்பாக, ஒரு சாதாரண கிராமத்தைச் சேர்ந்தவர் வசதியின்றி தனது வாழ்க்கையை இசைக்கு அர்ப்பணித்து இன்று உலகமே மரியாதை செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றார் என்பது அனைவராலும் பாராட்டத்தக்க விடயமாகும்.