சினிமா

ஒரு வருடம் கூட சேர்ந்து வாழல, தொடர்ந்து தவறாக.. நடிகை சுகன்யா உடைத்த உண்மை

Published

on

ஒரு வருடம் கூட சேர்ந்து வாழல, தொடர்ந்து தவறாக.. நடிகை சுகன்யா உடைத்த உண்மை

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் சுகன்யா. பரதநாட்டிய கலைஞரான இவர் நடிப்பை தாண்டி நாட்டியத்தில் மிகுந்த கவனம் உடையவர்.இவர் முதன்முதலாக புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார், முதல் படத்திற்கே பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமின்றி சுகன்யா டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளார், சீரியலில் நடித்துள்ளார்.இப்படி சினிமாவில் பல திறமைகளை வெளிக்காட்டிய சுகன்யா திருமண வாழ்க்கை நல்லதாக அமையவில்லை.இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சுகன்யா தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், “நானும் என் முன்னாள் கணவரும் ஒரு வருடம் கூட ஒன்றாக சேர்ந்து வாழவில்லை.என் அக்காவின் மகளை என் குழந்தை என்று கூறுகிறார்கள். நான் இது தொடர்பாக பலமுறை விளக்கம் கொடுத்துள்ளேன். ஆனால், தொடர்ந்து தவறாக எழுதி வந்தனர். இதன் காரணமாக, ஒரு சேனல் மீது புகார் கொடுத்தேன். சமீபத்தில் தான் அதன் கேஸ் முடிவுக்கு வந்தது” என்று தெரிவித்துள்ளார்.     

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version