சினிமா
கிளாமரா எப்பவும் நடிக்கமாட்டேன்..!–ரசிகர்களின் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்த சாந்தினி!
கிளாமரா எப்பவும் நடிக்கமாட்டேன்..!–ரசிகர்களின் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்த சாந்தினி!
தமிழ் சீரியல் உலகத்தில் பல்வேறு முக்கியமான கதாப்பாத்திரங்கள் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்த நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு, தனது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், திரைத்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ‘பயர்’ திரைப்படத்தில் நடித்த தனது கதாப்பாத்திரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.இந்நேர்காணலில் அவர் பகிர்ந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெகு ஆவலோடு பகிரப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் ஆதரவு பெற்று வருகின்றது. நடிகை சாந்தினி தனது வாழ்க்கைப் பாதையில் சந்தித்த சவால்கள் மற்றும் திரைத்துறையில் தன்னை நிலைநாட்டிய விதம் போன்றவற்றைப் பற்றி இந்நேர்காணலில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.‘பயர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான போது, அதில் சாந்தினி நடித்திருந்த கதாப்பாத்திரம் மென்மையானதாக காணப்பட்டதுடன் ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்திருந்தது. அதில் சாந்தினி மிகவும் கோம்லியான குணம் கொண்ட பெண்ணாக நடித்திருந்ததாக கூறியிருந்தார்.‘பயர்’ படத்திற்குப் பிறகு சில விமர்சகர்கள் மற்றும் சமூக ஊடகங்களிலிருந்து, சாந்தினி கிளாமராக நடித்தார் என சில விமர்சனங்கள் எழுந்தன. இதற்குப் பதிலளித்த சாந்தினி “அந்தக் கதாப்பாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்று இயக்குநர் சொன்னாரோ, அதைத்தான் நான் செய்தேன். அதில் நான் கிளாமரா நடிக்கவே இல்லை” எனக் கூறியுள்ளார்.