இலங்கை

கிளி. முழங்காவில் ஆரம்ப பாடசாலைக்கு முன்பு பெற்றோர்கள் போராட்டம்!

Published

on

கிளி. முழங்காவில் ஆரம்ப பாடசாலைக்கு முன்பு பெற்றோர்கள் போராட்டம்!

கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப  பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மீது அவதூறு பரப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலையின் நுழைவாயிலை மூடி இன்று காலை கவனவீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

முழங்காவில் ஆரம்ப பாடசாலையில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்கள் மீது சமூக வலைத்தளம் ஊடாக அவதூறு பரப்பி வருவதன் காரணமாக குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் முழங்காவில் பொலிஸ் நிலையம் மற்றும் கல்வி  திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடளித்துள்ளனர்.

Advertisement

முறைப்பாடளித்தும் இதுவரை எந்தவித தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று குறித்த கவனவீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் காரணமாக பாடசாலையில் கற்றல் செயற்பாடுகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version