பொழுதுபோக்கு

சினிமா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து… இந்த மாதம் ஓ.டி.டி-யில் ரிலீஸ் ஆகும் பாலிவுட் படங்கள்!

Published

on

சினிமா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து… இந்த மாதம் ஓ.டி.டி-யில் ரிலீஸ் ஆகும் பாலிவுட் படங்கள்!

2001 நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு, பிஎஸ்எஃப் அதிகாரி துபே இரண்டு ஆண்டுகள் விசாரணை நடத்தி இந்த தாக்குதலுக்கு காஜி பாபா மூளையாக செயல்பட்டதை கண்டறிந்தார். அவரது கண்டுபிடிப்புகள் இந்தியாவின் மிகப்பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு வழிவகுத்தன. இதனை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் ஏப்ரல் 25-ந் தேதி, வெளியாக உள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு அக்ஷைகுமார் நடிப்பில் வெளியான படம் கேசரி. அனுராக் சிங் இயக்கிய இந்த படம் போர் காட்சிகளை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் 2-ம் பாகமாக கேசரி அத்தியாயம் 2 என்ற பெயரில் தயாராகியுள்ளது. சி. சங்கரன் நாயர் ஒரு மரியாதைக்குரிய வழக்கறிஞர், ஒரு காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக பணியாற்றினார். 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகு, பிரிட்டிஷ் படைகள் நூற்றுக்கணக்கான அப்பாவி இந்தியர்களைக் கொன்ற பிறகு, உண்மைக்காக துணிச்சலாக நின்றதற்காக அவர் நினைவுகூரப்படுகிறார். நாயர் தனது சட்ட அறிவையும் சக்திவாய்ந்த குரலையும் பிரிட்டிஷ் ஆட்சியை சவால் செய்யவும் நீதி கோரவும் பயன்படுத்தினார், இது அவரை இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய நபராக மாற்றியது. அவரைப்பற்றிய படம் தான் கேசரி அத்தியாயம் 2. இந்த படம் ஏப்ரல் 18-ந் தேதி, தியேட்டரில் வெளியாக உள்ளது.சன்னி தியோல் நாயகனாக நடித்துள்ள ஜாத் படத்தை பிரபல இயக்குனர் கோபிசந்த் மிலானி இயக்கியுள்ளார். ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கரஸ்ட்ரா, ஜெகபதிபாபு ரன்தீப் ஹூடா நடித்த ரணதுங்கா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுமார் ரூ100 பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படம் ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது.குழந்தை திருமணம் சர்வசாதாரணமாக இருந்த காலத்தில், பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில், ஒரு கணவர் தனது மனைவியை இளம் வயதிலேயே திருமணம் செய்து வைப்பதற்கு பதிலாக கல்வி கற்பிக்கத் தேர்ந்தெடுத்தார். ஒன்றாக, அவர்கள் சமூக சீர்திருத்தவாதிகளாக மாறி, பின்தங்கியவர்களின் உரிமைகளுக்காக போராடும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள புலே திரைப்படம், ஏப்ரல், 11-ந் தேதி, திரையரங்குகளில் வெளியாக உள்ளது,ஒரு தலைசிறந்த திருடன் பிரபலமான ஆப்பிரிக்க ரெட் சன் வைரத்தைத் திருடப் புறப்படுகிறான். ஆனால், கவனமாகத் திட்டமிடப்பட்ட இந்தக் கொள்ளை விரைவில் துரோகம் மற்றும் கூட்டணிகளை மாற்றும் ஆபத்தான விளையாட்டாக மாறுகிறத. அதன்பிறகு என்ன நடந்தது என்பது தான் திரைப்பதை. சைப் அலிகான் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 25-ந் தேதி நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.இந்த படத்தின் டீஸரின் படி, சஞ்சய் தத் பேய்களை எதிர்த்துப் போராடும் ஒரு பேய் வேட்டைக்காரனாகத் தோன்றுகிறார். மௌனி ராய் ஒரு பேயாக மாறி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். காதலர் தினத்தன்று இது ஒரு பேயாகத் தெரிகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் திரைப்பதை. இந்த படம் ஏப்ரல் 18-ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த சோரி படத்தின் 2ம் பாகமாக சோரி 2 தயாராகியுள்ளது. விஷால் .பியூரியா இயக்கியுள்ள இந்த படத்தில் சாரா அலி கான் முக்கிய கேரக்டரில் நடித்தள்ளர். முதல் பாகத்தில் தீய சக்திகளால் வேட்டையாடப்படும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப் பற்றி திரைக்கதை அமைக்கப்பட்டது. இந்த படம் ஏப்ரல் 11-ந் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version