சினிமா

“சூர்யா 45” சூட்டிங் தளத்தில் பரபரப்பு..! பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி…

Published

on

“சூர்யா 45” சூட்டிங் தளத்தில் பரபரப்பு..! பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி…

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் பாரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி ஒரு சில விமர்சனங்களினால் படம் தோல்வியை சந்தித்தது. இதன் பின்னர் சூர்யா தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். மே மாதம் 1 ஆம் திகதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள “ரெட்ரோ ” படம் வெளியாகவுள்ளது.மேலும் சூர்யா rj பாலாஜி இயக்கத்தில் அவரது 45 ஆவது படத்தில் நடித்து வருகின்றார். இப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். அனைத்து வேலைகளும் மிகவும் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பின் போது கலவரம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் பாடல் காட்சி ஒன்றினை எடுப்பதற்கு 500 பேர் கொண்ட குழு நடனம் ஆடியுள்ளதாகவும் வெளியில் நின்று சூட்டிங் செய்யும் போது பெண்ணொருவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர் உடனடியாக வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு வீடிற்கு சென்றுள்ளதாகவும் அதன் பின் குறித்த பெண் தொடர்பில் எதுவித தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version