இலங்கை
பெற்றோல் விலை 10 ரூபா குறைப்பு
பெற்றோல் விலை 10 ரூபா குறைப்பு
நாட்டில் எரிபொருள்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி பெற்றோலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 299 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 பெற்றோல் விலையும் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 361 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓட்டோ டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சூப்பர் டீசல் ஆகியவற்றின் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.