இலங்கை
யாழில் பெருமளவான கஞ்சாவுடன் மூவர் கைது!
யாழில் பெருமளவான கஞ்சாவுடன் மூவர் கைது!
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து மீன்கள் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் கூலர்ரக வாகனத்தில் பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சாவினை ஏற்றிக்கொண்டிருந்த மூவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலில் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கூலர் ரக வாகனத்துடன் 20 மில்லியன் பெறுமதியான 96 கிலோ 310 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் வவுனியாவை சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் மூவரும் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதி மன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.