உலகம்

3 லட்சம் பேர் உயிரிழக்க கூடும் – எச்சரிக்கை விடுத்த ஜப்பான்

Published

on

Loading

3 லட்சம் பேர் உயிரிழக்க கூடும் – எச்சரிக்கை விடுத்த ஜப்பான்

மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். 3500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் மியான்மரில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜப்பானுக்கு மெகா நிலநடுக்கம் ஏற்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் மெகா நிலநடுக்கம் ஏற்பட 80% வாய்ப்புள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கமானது உடனடியாக ஏற்படுவதற்கு எந்த சாத்தியக்கூறும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளத.

ஜப்பானின் நான்கை பள்ளத்தாக்கில் நீண்ட நாட்களாக ஏற்பட கூடும் என்று அஞ்சப்படும் ‘மெகா நிலநடுக்கம்’ ஏற்பட்டால் சுமார் 3 லட்சம் மக்கள் உயிரிழக்கக் கூடும் என அந்நாட்டு அரசு பகீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Advertisement

மேலும் ஜப்பான் பொருளாதாரத்தில் 1.81 ட்ரில்லியன் டாலர் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version