உலகம்

அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை ரத்து செய்த இஸ்ரேல்

Published

on

அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை ரத்து செய்த இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்ற டிரம்ப், பல நாடுகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் வரி விதிப்புகளை அமல்படுத்தி வருகிறார். 

கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரியும், சீனாவுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் விதித்து உத்தரவிட்டார். 

Advertisement

பிப்ரவரி 1ந்தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தது.

இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது 100 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தும் முடிவை டிரம்ப் அரசு எடுத்துள்ளது. 

இந்த வரி விதிப்புகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி டிரம்ப், புதிய வரி விதிப்பு திட்டம் ஒன்றை, சுதந்திர நாள் என்ற பெயரில் இன்று வெளியிடுகிறார்.

Advertisement

டிரம்பின் வரி விதிப்பு முடிவிற்கு இடையே, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா ஆகியன அமெரிக்கா மீது விதித்த வரிகளை குறைத்துள்ளன என செய்தி வெளியான சூழலில், இஸ்ரேலும் வரி ரத்து பற்றிய அறிவிப்பை வெளியிட்டு அமெரிக்காவை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இதுபற்றி வெளியான செய்தியில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நிதி மந்திரி பிஜாலெல் ஸ்மோத்ரிச் மற்றும் பொருளாதார மற்றும் தொழில் துறை மந்திரியான நிர் பர்கத் உத்தரவின்பேரில் அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அனைத்து சுங்க வரிகளும் ரத்து செய்யப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்புதலை அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கான நிதி குழு வழங்கியுள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version