இலங்கை

இஷாரா செவ்வந்தி தொடர்பில் மக்கள் உதவியை நாடும் பொலிசார்!

Published

on

இஷாரா செவ்வந்தி தொடர்பில் மக்கள் உதவியை நாடும் பொலிசார்!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ  என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட யுவதி ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்;
இஷாரா செவ்வந்தி அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் குறித்த ஹோட்டலுக்கு சென்று சோதனையிட்ட போது இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட யுவதி ஒருவரை போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்துக்குள் வைத்து சுட்டுக்கொலை செய்வதற்காக சட்டத்தரணி வேடத்தில் சென்று பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என பொலிஸார் அண்மையில் அறிவித்திருந்தனர். 

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் 071-8591727 அல்லது 071-8591735 என்ற தொலைபேசி இலக்கங்களுக்க தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version