இந்தியா
உரிமம் புதுப்பிக்காத மதுக்கடைகளுக்கு சீல்: புதுச்சேரி கலால் துறை அதிரடி நடவடிக்கை!
உரிமம் புதுப்பிக்காத மதுக்கடைகளுக்கு சீல்: புதுச்சேரி கலால் துறை அதிரடி நடவடிக்கை!
புதுச்சேரி மாநிலத்தில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு கலால் துறை சார்பில் அதிரடியாக சீல் வைக்கப்பட்டன.புதுவை மாநிலத்தில் மதுக்கடைகளுக்கு ஆண்டு தோறும் உரிமம் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், கடந்த 2024 ஆம் ஆண்டு 396 மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டன. இந்த உரிமம் 2025-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை செயல்படவும், அதன்பின் உரிமத்தைப் புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.இதனிடையே, புதுச்சேரி நகா் பகுதியிலும், பாகூா் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளிலும் உரிமம் பெற்றவைகளில் 381 மதுக்கடைகளின் உரிமையாளா்கள் உரிமத்தை புதுப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. உரிமத்தைப் புதுப்பிக்காதவா்களுக்கு கலால் துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எச்சரிக்கைக்குப் பிறகும் மதுக்கடைகளின் உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை.இதன் காரணமாக உரிமத்தை புதுப்பிக்காத கடைகளுக்கு சீலிட கலால் துறை வட்டாட்சியா் ராஜேஷ்கண்ணா தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் நடவடிக்கை எடுத்தனா். அதனையொட்டி, கலால் உதவி ஆணையர் மேத்யூஸ் பிராங்ளின் உத்தரவின்பேரில், தாசில்தார் ராஜேஸ்கண்ணன் தலைமையிலான ஊழியர்கள் நேற்று உரிமத்தை புதுப்பிக்காத 14 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 15 சில்லரை மதுபான கடைகளுக்கு அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.இந்த கடைகள் உரிமம் புதுப்பிப்பு கட்டணம் ரூ.6 லட்சத்துடன், 10 சதவீதம் அபராத கட்டணம் செலுத்தி, உரிமத்தை புதுப்பித்த பின் திறக்க அனுமதி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.