இலங்கை
உள்ளாட்சித் தேர்தல் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் மீது நீதிமன்றில் நேற்று விசாரணை!
உள்ளாட்சித் தேர்தல் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் மீது நீதிமன்றில் நேற்று விசாரணை!
நாளையும் தொடரும்nவெள்ளியன்று தீர்ப்பு?
உள்ளூராட்சித் தேர்தலின்போது நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் மீதான ஆட்சேபனை விசாரணைகள் உயர்நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றன. இந்த மனுக்கள் மீதான தொடர்ச்சியான விசாரணைகள் நாளையதினம் இடம்பெறும் என்றும் திகதியிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் பல முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகளே நேற்று இடம்பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் நாளை இடம்பெற்று, நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படலாம் என்று கருதப்படுகின்றது.
நிராகரிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சட்டமா அதிபர் திணைக்களத்தில் பரிசீலனைகள் இடம்பெற்றன. இதன்போது தீர்க்கப்படாத மனுக்கள் மீதான சட்ட நடவடிக்கைகளே தற்போது இடம்பெற்று வருகின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் நிசாம் காரியப்பர், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் ஜிப்ரி அழகரத்தினம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் ஆகியோர் முன்னிலையாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.