சினிமா

எதுக்கும் ஒத்துக்கவே இல்ல!! கடுப்பாகி ஏ ஆர் ரஹ்மான் தந்தை செய்த செயல்..

Published

on

எதுக்கும் ஒத்துக்கவே இல்ல!! கடுப்பாகி ஏ ஆர் ரஹ்மான் தந்தை செய்த செயல்..

இந்திய சினிமாவில் இசையமைப்பாளராக திகழ்ந்து மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் ஏ ஆர் ரஹ்மான். தற்போது தக் லைஃப் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வருகிறார்.சமீபத்தில் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இருவரும் பிரிவதாக அறிவித்தாலும் சட்டப்பூர்வமாக இன்னும் விவாகரத்து பெறவில்லை.தானும் ரஹ்மானும் கணவன் மனைவிதான், விவாகரத்து இன்னும் பெறவில்லை, அதனால் யாரும் தன்னை ஏ ஆர் ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என்று சாய்ரா பானு தெரிவித்திருந்தார்.ஏ ஆர் ரஹ்மானின் தந்தை சேகர் மலையாள மொழியில் 50க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்திருக்கிறார். ஒரு மலையாள படத்திற்கு இசையமைக்கும் போது எந்த டியூனை கொடுத்தாலும் அந்த படத்தின் இயக்குநர் ஒத்துக்கொள்ளவே இல்லையாம்.இதனால் கடுப்பான சேகர், தேசிய கீதமான ஜன கன மண பாடலின் ட்யூனை மெதுவாக வாசித்திருக்கிறார். இதைக்கேட்ட இயக்குநர் இது நல்லா இருக்கே என்று சொன்னதும் மேலும் படுப்பாகி, யோவ் இது தேசிய கீதம்யா என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தை ஒரு பேட்டியொன்றில் ரஹ்மான், தன் தந்தைக்கு நிறையை சென்ஸ் ஆஃப் ஹியூமர் இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version