இலங்கை
ஐந்தாண்டுக்குள் அரசியலமைப்பு!
ஐந்தாண்டுக்குள் அரசியலமைப்பு!
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான கால எல்லையை என்னால் சரியாகக் குறிப்பிட முடியாது. ஆனால் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் இதற்குரிய பணி நிச்சயம் நிறைவேறும் – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
எல்லா விடயங்களையும் ஆறுமாத காலத்துக்குள் செய்ய முடியாது. அதனால்தான் ஐந்தாண்டுகள் ஆணை வழங்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணியை ஆரம்பத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டியதில்லை. நல்லாட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட வரைவு நகல் உள்ளது. மேலும் பல அறிக்கைகளும் உள்ளன.
கால எல்லை தொடர்பில் கேட்டால் என்னால் பதில் வழங்க முடியாது. ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளிட்ட புதிய அரசியலமைப்பு ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் கொண்டுவரப்படும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் நீக்கப்படும். குறித்த முறைமையை தக்க வைப்பது தொடர்பில் எவ்வித பேச்சும் நடக்கவில்லை – என்றார்.