இந்தியா
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல்: புதுச்சேரி முதல்வருக்கு தி.மு.க எம்.எல்.ஏ வலியுறுத்தல்
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல்: புதுச்சேரி முதல்வருக்கு தி.மு.க எம்.எல்.ஏ வலியுறுத்தல்
புதிய பென்ஷன் திட்டத்தில் ஒன்றியஅரசு அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல்வழங்க வேண்டும் தி.மு.க துணை அமைப்பாளர் அணிபால்கென்னடி எம்.எல்.ஏ புதுச்சேரி முதல்வரை வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளார் அறிக்கையில், “ஒன்றிய அரசாங்கம் கடந்த மார்ச் 19 ஆம் தேதி அன்று தேசிய ஓய்வூதிய அமைப்பு எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஓய்வு பெற இருப்பவர்களுக்கும்மாதந்தோறும் வழங்கப்படுகின்ற ஓய்வூதியத் தொகை மிக மிக குறைவாக இருப்பதால் ஒருங்கிணைந்த ஓய்வு ஊதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஒன்றிய அரசின் ஆணையைப் பின்பற்றி நமது புதுச்சேரி அரசாங்கம் இதுவரை எந்த ஒப்புதலும் வழங்கவில்லை. ஏற்கனவே, தேசிய ஓய்வூதிய அமைப்புஓய்வூதியம் திட்டத்தின்கீழ் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் கடந்த மாதம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பல்வேறு நிலைகளில் பணிபுரிந்த அரசு பணியாளர்களை பணிநிலைத்தன்மை செய்வதற்கு- பல்வேறு நமது அரசுகள் காலதாமதப்படுத்தியதால் -புதிய ஓய்வூதிய திட்டத்தில் குரூப் ‘ஏ” நிலையில் இருந்தாலும் சரி குரூப்” சி”நிலையில் இருந்தாலும் சரி ஓய்வு பெற்ற ஊழியர்கள் எந்த அளவுக்கு ஓய்வு ஊதியம் பெற்று வருகிறார்கள் என்பதை மாண்புமிகு முதலமைச்சரும் அமைச்சர் பெருமக்களோ அறிய வாய்ப்பில்லை. அதே சமயத்தில் அரசு உயர்மட்ட அதிகாரிகளும் கருவூல அதிகாரிகளும் நன்கு அறிவார்கள். உதாரணத்திற்கு குரூப் ஏ பணியில் ஓய்வு பெற்ற ஒரு உதவி பேராசிரியர் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 70 ஆயிரம் சம்பளம் வாங்கிய அந்த ஊழியர் ஓய்வு பெற்றபோது தன்னுடைய சேமிப்பு பணத்தில் ஏறக்குறைய பத்தே முக்கால் லட்சம் அதாவது 40% புதிய பென்ஷன் திட்டத்தில் ஒன்றிய அரசு வழிகாட்டிய நிறுவனங்களில் இருப்பு வைத்துவிட்டு ரூபாய் 5135 தான் பென்ஷன் வாங்குகிறார். அதைவிட மோசமாக குரூப்” சி “பணியில் ஓய்வு பெற்றவர்கள் 14 ஆண்டு முடித்தவர்கள் தன்னுடைய பங்குத்தொகை 40 சதவீதத்தை ஒன்றிய அரசு சொல்லிய இடத்தில் வைப்புத் தொகையாக வைத்துவிட்டு நமது முதலமைச்சர் முதியோர்களுக்கு கொடுக்கின்ற ஓய்வூதிய தொகையான ரூபாய் 2500 விட குறைவாக குறிப்பாக 1165 ரூபாய் தான் பென்சனாக பெறுகிறார்கள்.நமது அரசாங்கத்தில் பாடுபட்ட அவர்களுடைய வறுமையான வாழ்க்கை நிலையினை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன். ஆகவே இந்த சூழ்நிலையில் ஒன்றிய அரசு அறிவித்த -ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை போல் பலன் அளிக்கவில்லை என்றாலும் ஓரளவு நன்மை இருப்பதை கருதி-ஒன்றிய அரசு அனுப்பிய அரசாணைக்கு ஒப்புதல் வழங்குவதன் மூலம் ஓய்வூதியர்களுக்கு ஓரளவு பலன் கிடைக்க நேரிடும். எனவே மாண்புமி முதல்வர் அவர்கள் நிதித்துறை மூலம் அரசாணை பிறப்பித்து அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அனைத்து ஊழியர்களுக்கு தெரியப்படுத்தி எத்திட்டம் பயனளிக்கும் என்பதனை அறிந்து ஊழியர்கள் பலன் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரும் மாதம் முதல் கிடைக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கருணை உள்ளத்தோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதே சமயத்தில் அவர்களுக்கு சேர வேண்டிய நிலையான மருத்துவபடியையும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதே சமயத்தில் ஒன்றிய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வு ஊதிய திட்டத்தை செயல்படுத்த காலதாமதப்படுத்துவது என்ன விந்தையான அரசு நிர்வாகம்? என்பதை முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்வதோடு நமது அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களையும் ஓய்வு பெற இருப்பவர்களையும் இம்மாதிரியான சிரமங்களை அளிக்க வேண்டாம் என இந்த நேரத்தில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.