சினிமா
ஒரு கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த வடிவேல்..! யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல்!
ஒரு கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த வடிவேல்..! யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல்!
தமிழ் சினிமாவின் நகைச்சுவை அரசராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து நிற்பவர் வடிவேல். அவருடைய ஒவ்வொரு காட்சி மற்றும் வசனங்கள் என்பன இன்று வரை ரசிகர்களின் மனதில் நிலைத்துள்ளது. இந்நிலையில், நடிகர் ராதாகிருஷ்ணன் சமீபத்திய பேட்டியில், வடிவேலுவைத திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாகவும் எனினும் அவர் நடித்தால் ஹீரோவாகத் தான் நடிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதால் இன்னும் படப்பிடிப்புத் தொடங்கவில்லை எனவும் கூறியுள்ளார். இத்தகவல் தற்பொழுது சினிமா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.வடிவேலு கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் இருந்து தளர்ந்து விட்டாலும், அவர் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு கொஞ்சமும் குறையவில்லை. அந்தவகையில் நடிகர் மற்றும் இயக்குநரான ராதாகிருஷ்ணன் “வடிவேலுவை வைத்து ஒரு படத்தை உருவாக்க வேண்டுமென்ற ஆசையுடன், அவரிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து வைத்துள்ளேன்” எனக்கூறியுள்ள தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.வடிவேலு தற்பொழுது பல படங்களில் துணை நடிகராக இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இப்புதிய படம் பற்றிய முடிவினை வெகுவிரைவில் வடிவேல் எடுக்கவேண்டும் என சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.