இலங்கை

ஜப்பானிய போர்க் கப்பல்கள் இலங்கையில்!

Published

on

ஜப்பானிய போர்க் கப்பல்கள் இலங்கையில்!

ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்புப் படை கப்பல்களான புங்கோ (BUNGO) மற்றும் எராஜிமா (ETAJIMA) ஆகியன நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தன.

 இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.இலங்கை உணவகம்

Advertisement

141 மீட்டர் நீளமுள்ள JASDF புங்கோ என்ற கப்பல், கண்ணிவெடி அகற்றும் கப்பலாகும், இந்தக் கப்பலில் 125 பேர் கொண்ட குழுவினர் பணியாற்றுகின்றனர்.

 65 மீட்டர் நீளமுள்ள கண்ணிவெடி அகற்றும் கப்பலான எராஜிமா, 54 பேர் கொண்ட குழுவினருடன் செயற்படுகிறது.

இந்த கப்பல்கள் இரண்டும், கொழும்பில் நங்கூரமிட்டிருக்கும் போது, அவற்றின் பணியாளர்கள் கொழும்பு நகரத்திற்குள் உள்ள சில சுற்றுலா தலங்களுக்கு பயணம் செய்வர்.

Advertisement

 இந்தநிலையில் கப்பல்கள் இரண்டும் ஏப்ரல் 04 ஆம் திகதியன்று கொழும்பிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version