சினிமா

ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை!! நடிகை திவ்ய பாரதி காட்டம்..

Published

on

ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை!! நடிகை திவ்ய பாரதி காட்டம்..

பேச்சுலர், கிங்ஸ்டன் போன்ற படங்களில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமாருடன் ஜோடிப்போட்டு நடித்திருந்தார் நடிகை திவ்யபாரதி. இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஜிவி பிரகாஷ் – மனைவி சைந்தவி விவாகரத்து பெற்றிருந்தனர்.இவர்களின் விவாகரத்துக்கு திவ்யபாரதி தான் காரணம் என்று கிசுகிசு எழுந்தது. இதுகுறித்து ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி பல பேட்டிகளில் அதெல்லாம் கிடையாது என்று விளக்கமும் அளித்திருந்தனர்.இந்நிலையில் இதுபற்றி மீண்டும் செய்திகள் இணையத்தில் பேசப்பட்டு வந்த நிலையில் திவ்யபாரதி அதற்கான முழு விளக்கத்தையும் அளித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திவ்யபாரதி பகிர்ந்த பதிவில், எனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் என் பெயர் இழுக்கப்பட்டுள்ளது.ஜிவி-யின் குடும்ப பிரச்சனைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, வெளிப்படையாகச் சொல்வதனால் நான் ஒரு நடிகருடன் டேட்டிங் செய்யமாட்டேன், அதுவும் நிச்சயமாக திருமணமான ஆணுடன் அதை செய்யவே மாட்டேன். ஆதாரமற்ற வதந்திகள் என் கவனத்தை ஈர்க்கத் தேவையில்லை என்று நம்பி இதுவரை அமைதியாக இருந்தேன்.இருந்தாலும் இது எல்லை கடந்து போகிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன். நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண்.நான் வதந்திகளால் வரையறுக்கப்பட்டமாட்டேன். எதிர்மறையை பரப்புவதற்கு பதில், ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம். என் எல்லையை மதிக்கவும், இந்த விஷயத்தில் இது என் முதல் மற்றும் இறுதி அறிக்கையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version