இந்தியா

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் ‘பிட்’ அடிக்க அனுமதி? கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் முற்றுகை

Published

on

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் ‘பிட்’ அடிக்க அனுமதி? கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் முற்றுகை

புதுச்சேரியில் நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதித்த ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் தமிழ் உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த படத்திட்டத்தில் பயின்ற மாணவ மாணவிகள் எழுதிய மாதிரித் தேர்வில் 95% மாணவர்கள் படுதோல்வி. தோல்வி அடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியது.இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்திக் காட்டவும், தேர்வில் மாணவர்கள் பார்த்து எழுதும் தவறான நிலையை ஆசிரியர்கள் அனுமதித்ததாக புகார் எழுந்தது.இதனை கண்டித்தும் தமிழ் உரிமை பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் பாவாணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் இன்று கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஆசிரியர்களின் தவறான செயல்களை சுட்டிக்காட்டி, மாணவர்களை புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதித்த ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மீது மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த போராட்டத்தினால் கல்வித்துறை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version