இலங்கை
பேருந்துக் கட்டணம் ஜூலையில் உயரும்!
பேருந்துக் கட்டணம் ஜூலையில் உயரும்!
ஜூலை மாதத்திலிருந்து பேருந்துக் கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று மேலும் தெரிவித்ததாவது:
பயணியொருவருக்கு மூன்று ரூபா நஷ்டத்திலேயே பேருந்துகள் செயற்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில், அரசாங்கத்தால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகள் காரணமாக பேருந்துக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, பேருந்துக் கட்டணங்கள் ஜூலை மாதம்முதல் நிச்சயமாக அதிகரிக்கும் – என்றார்.