இலங்கை

மட்டக்களப்பில் கார் ஒன்றால் தடைப்பட்ட மின்சாரம்

Published

on

மட்டக்களப்பில் கார் ஒன்றால் தடைப்பட்ட மின்சாரம்

மட்டக்களப்பில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான நிலையில் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவருகையில்,

Advertisement

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் காரில் பயணம் செய்தவர் காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது.

அத்தோடு உயர் மின் அழுத்த மின்சாரத் தூணும் உடைந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது

Advertisement

மேலும் விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version