இலங்கை
மியன்மாருக்கு 1 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி வழங்கும் இலங்கை
மியன்மாருக்கு 1 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி வழங்கும் இலங்கை
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலரை மனிதாபிமான உதவியாக வழங்க உறுதியளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மருத்துவக் குழுக்களும், சுகாதார பிரிவின் ஆதரவும் வழங்கத் தயாராக இருப்பதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்லியன்று மியான்மரில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 3000 ஐ நெருங்கும் நிலையில் இன்னும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நிலச்சரிவால் சிதைந்த மியான்மாருக்கு பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.