இலங்கை

ஹரிணியிடம் இருந்து பறிபோகும் பிரதமர் பதவி?

Published

on

ஹரிணியிடம் இருந்து பறிபோகும் பிரதமர் பதவி?

 இலங்கையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியம் உண்டு என மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதி நிதி அமைச்சர் பதவியிலும் மாற்றம் செய்யப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.   

Advertisement

அதன்படி தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு பதிலாக பிமல் ரத்நாயக்க பிரதமராக நியமிக்கப்படலாம்.

பிரதி நிதி அமைச்சர் பதவிக்கு ஒரு தொழிலதிபர் நியமிக்கப்படலாம் என்பதற்கான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் வருண ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

அதேவேளை வருண ராஜபக்ச, கடந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) மேல் மாகாண சபை குழுத் தலைவராக கடயைமாற்றியுள்ளார் என்பதுடன் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.

Advertisement

எனினும் இந்த தகவல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியோ அல்லது மக்கள் விடுதலை முன்னணியோ இதுவரையில் அதிகாரபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version