இலங்கை

23 பிரபல பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக நடவடிக்கை!

Published

on

23 பிரபல பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக நடவடிக்கை!

 நுகர்வோர் விவகார அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட விசேட சோதனைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 23 பல்பொருள் அங்காடிகள் நேற்று (01) சோதனை செய்யப்பட்டன.

அந்த பல்பொருள் அங்காடிகளில், காலாவதியான பொருட்கள் தொடர்பிலும், விலைகளைக் காட்சிப்படுத்தாதமை, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துதல், பொருட்களில் குறிப்பிட வேண்டிய தகவல்கள் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்தல் போன்ற மீறல்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Advertisement

பண்டிகைக் காலத்தில் சந்தைகளில் நுகர்வோர் அநீதிக்கு உள்ளாவதை தடுக்க, இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ​​172 பல்பொருள் அங்காடிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றங்கள் அந்த நிறுவனங்களுக்கு 6.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் அபராதமும் விதித்துள்ளன.

நுகர்வோர் விவகார அதிகாரசபை சந்தைகளில் நடத்திய சோதனைகளின் போது, ​​பல்பொருள் அங்காடிகளிலும் சோதனைகள் மற்றும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மேற்கூறிய சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகளில், சுமார் 16 நிறுவனங்கள் நன்கு அறியப்பட்ட பல்பொருள் அங்காடி வலையமைப்புகளாக செயல்படும் நிறுவனங்கள் என்று கூறப்படுகிறது.

Advertisement

அதன்படி, பல்பொருள் அங்காடிகள் உட்பட சந்தையில் இருந்து பொருட்களை வாங்கும் போது காலாவதி திகதி மற்றும் பிற தகவல்களை தொடர்ந்தும்m சரிபார்க்குமாறு நுகர்வோருக்கு அதிகாரசபை வலியுறுத்துகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version