உலகம்

Forbes உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்

Published

on

Forbes உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்

ஃபோர்ப்ஸ் இதழ் 2025 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பில்லியனர்களின் எண்ணிக்கை 3,028 ஆக உயர்ந்துள்ளது.

தரவரிசையில் அமெரிக்கா 902 பில்லியனர்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. அதைத் தொடர்ந்து பட்டியலில் சீனா (516) மற்றும் இந்தியா (205) பில்லியர்களை கொண்டுள்ளன.

Advertisement

342 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 2 வது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார்.

முகேஷ் அம்பானி இந்தியாவின் பணக்காரர் மற்றும் ஆசியாவின் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

ஆனால் கடந்தாண்டு 116 பில்லியன் டாலராக இருந்த அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 92.5 பில்லியன் டாலராக குறைந்துள்ளதால் அவர் உலகளவில் பணக்காரர் பட்டியலில் 18 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Advertisement

அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, 56.3 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 28வது இடத்தில் உள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version