சினிமா

அடடே ‘டெஸ்ட்’ படத்தின் கதை இதுதானா..? முக்கிய சீக்கிரெட்டை உடைத்த மாதவன்..!

Published

on

அடடே ‘டெஸ்ட்’ படத்தின் கதை இதுதானா..? முக்கிய சீக்கிரெட்டை உடைத்த மாதவன்..!

இந்திய சினிமாவில் தனி முத்திரையை பதித்த முன்னணி நடிகரான மாதவன், தற்பொழுது தன்னுடைய புதிய திரைப்படமான ‘டெஸ்ட்’ பற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். நடிகர் சித்தார்த் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள இப்படம், ரசிகர்கள் மற்றும் திரைத் துறையினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்தின் கதை குறித்து இதுவரை யாரும் விரிவாக கூறாத நிலையில், சமீபத்தில் மாதவன், ‘டெஸ்ட்’ படத்தின் மையக் கருத்தையும், அதில் உள்ள தனித்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அவரது பேச்சு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.மாதவன் அதில் கூறியதாவது,“டெஸ்ட் படம் மிகவும் எளிமையான கதையாக காணப்படுகின்றது எனக் கூறியதுடன் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பற்றியது எனக் கூறியுள்ளார். எனினும் அதில் நடிப்பவர்களுக்கு கிரிக்கெட்டுடன் நேரடி சம்பந்தம் இல்லை. ஆனா ஒரு நாள் நடந்த ஒரு சம்பவம், அவர்கள் வாழ்க்கையை முழுமையாக மாற்றி அவர்களை கிரிக்கெட்டுக்குள் நுழைய வைத்துள்ளது” எனக் கூறியுள்ளார்.இக்கருத்து ரசிகர்களிடையே பெரும் ஆவலையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. பொதுவாக கிரிக்கெட் பின்னணியில் நிகழும் திரைப்படங்கள், வீரர்களை மையமாகக் கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த ‘டெஸ்ட்’ திரைப்படம், கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு மனித உணர்வுகளை பிரதிபலிக்கின்ற வகையில் காணப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version