பொழுதுபோக்கு

அப்பா அஜித்துக்கே டஃப் கொடுப்பாரோ? கார் ரேஸில் கலக்கும் ஆத்விக்; வைரல் வீடியோ!

Published

on

அப்பா அஜித்துக்கே டஃப் கொடுப்பாரோ? கார் ரேஸில் கலக்கும் ஆத்விக்; வைரல் வீடியோ!

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கின் விளையாட்டுத்திறனை பார்த்து வியந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அப்பாவை போலவே அவரும் கார் ரேஸிங்கில் பயிற்சி பெறும் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களின் பட்டியலில் முன்னணியில் இருந்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதல், பைக்ரேஸ் உள்ளிட்ட விளையாட்டு தொடர்பான செயல்களில் ஆர்வம் காட்டி வரும் அஜித் அவ்வப்போது தனது பைக்கில் சுற்றுலா என்ற பெயரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்துள்ளார்.அதேபோல் சமீபத்தில் இந்தியாவின் அண்டை நாடாள நேபாளத்தில் இருந்து உலக டூர் சுற்றுலாவை தொடங்கிய அஜித் தற்போது துபாய் கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,  அஜித் சாம்பியன் பட்டம் பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.  நடிப்பு பைக் ரேஸ் என சுற்றி வரும் அஜித்துக்கு மாறாக அவரது மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் மிகுந்தவராக உள்ளார்.A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)ஐஎஸ்எல் தொடரில் விளையாடி வரும் சென்னையின் எப்.சி அணியின் யூத் டீமிற்காக விளையாட இருந்தபோது, ஆத்விக் கால்பந்து விளையாடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. அந்த வகையில் தற்போது ஆத்விக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் தற்போது துபாய் கார் ரேஸிங்கில் பங்கேற்றுள்ள நிலையில், தற்போது ஆத்விக்கும் கார் ரேஸிங்கில் களமிறங்கியுள்ளார்.pic.twitter.com/3SeRFQMNzZகோ கார்ட் சர்க்யூட்டில் ஆத்விக் ட்ராக்கில் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் மற்றும் ஷாலினி இருவரும் ஆத்விக்கை உற்சாகப்படுத்தி வருகின்றனர். நடிப்பு, விளையாட்டு என பன்முக திறமையுடன் வலம் வரும் அஜித்தை போலவே, அவரது மகனும், கால்பந்து கார் ரேஸ் என விளையாட்டில் ஆர்வம் காட்டி வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version