இலங்கை
ஆட்டிசம் குறைப்பாடால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு!
ஆட்டிசம் குறைப்பாடால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு!
ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் ஸ்வர்ணா விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு இந்த நாட்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், 93 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நோயை ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காண முடிந்தால் 90% பேரை இரண்டரை முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் தலையீடுகள் மூலம் எங்களிடம் கொண்டு வர முடியும் எனக் கூறியுள்ளார்.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை