சினிமா

இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் புகழ் நடிகை ஓவியாவின் வீடியோ..

Published

on

இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் புகழ் நடிகை ஓவியாவின் வீடியோ..

கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதைத்தொடர்ந்து இவர் மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.ஓவியா விஜய் டிவியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.பிக் பாஸ் முடிந்து வெளியில் வரும் போது பெரிய அளவில் படவாய்ப்புகள் அவருக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சில படங்களில் நடித்து வந்த ஓவியா கடைசியாக யோகிபாபுவுடன் இணைந்து பூமர் அங்கிள் என்ற படத்தில் நடித்திருந்தார்.பூஜை வீடியோஇந்நிலையில், புதிய படம் ஒன்றின் பூஜை வீடியோவை தனது இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஓவியா. இந்த பூஜையில் சேலை அணிந்துக் கொண்டு ஓவியா வலம் வந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version