இலங்கை

இலங்கையின் கடல் வளங்களைக் கைப்பற்றி இந்தியாவிற்கு வழங்க முயற்சி

Published

on

இலங்கையின் கடல் வளங்களைக் கைப்பற்றி இந்தியாவிற்கு வழங்க முயற்சி

பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுர குமார மீது அழுத்தம் செலுத்தி இலங்கையின் கடல் வளங்களைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்.

என ஜனாதிபதி செயலகத்திற்கு எதிர்ப்பு கடிதத்தை சமர்ப்பிக்கும் செயற்பாடு இன்றைய தினம் கொழும்பு ஜனாதிபதி செயலக முன்றலில் நடைபெற்றது.

Advertisement

இது குறித்து மேலும் தெரிய வருவதாவதுஇ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கடலடிப் பகுதியில் உள்ள கனிம வளங்களை ஆராயும் உரிமையை இந்தியாவிற்கு மாற்றுவது குறித்து பிரதமர் மோடி விவாதித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தனது இந்திய விஜயத்தின் போது இது குறித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

Advertisement

பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுர குமார மீது அழுத்தம் செலுத்தி இலங்கையின் கடல் வளங்களைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்.

நாம் அனைவரும் ஜனாதிபதிக்கு பலமாக இருக்க வேண்டும் என சங்க சந்திம அபேவர்தன இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பித்த கடிதத்திலேயே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆரம்பத்தில் அந்தக் கடிதத்தை ஏற்க மறுத்த நிலையில் சுமார் ஒரு மணி நேர காத்திருப்பின் பின்னர் கடிதத்தை வழங்க அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version