உலகம்

கிரீஸில் அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு

Published

on

கிரீஸில் அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு

துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் கடல் வழியாக பயணித்த அகதிகள் படகு ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே கடலில் உயிருக்கு போராடிய 23 பேரை கிரீஸ் நாட்டின் கடலோரக் காவல் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Advertisement

நல்ல வானிலை இருந்தபோதிலும் நடந்த இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதேபோல விபத்துக்குள்ளான அந்த படகில் பயணித்த அகதிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்களும் வெளியாகவில்லை.

லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version