இலங்கை

குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிஸம் ; பெற்றோரே அவதானம்

Published

on

குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிஸம் ; பெற்றோரே அவதானம்

   நாட்டில் ஆட்டிஸம் எனப்படும் நரம்பியல் வளர்ச்சி கோளாறு நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஸ்வர்ணா விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Advertisement

நாட்டில் உள்ள 93 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிஸம் எனப்படும் நரம்பியல் வளர்ச்சி கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இலங்கையில் 93 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த நிலை இருப்பது கண்டறியப்பட்டது.

அதன் பிறகு, அது முறையாக செய்யப்படவில்லை. இப்போது பயணம் தொடங்குகிறது. நமக்கு வேறு பெறுபேறுகள் கிடைக்கும்.

Advertisement

ஏனென்றால் இது உலகம் முழுவதும் ஒரு வளர்ந்து வரும் போக்கு காணப்படுகிறது.

இலங்கையில் இந்நிலையை எதிர்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நாங்கள் உணர்கிறோம்.

அதை விரைவாக அடையாளம் காண்பது முக்கியம்.

Advertisement

ஆரம்ப நிலையிலேயே இதை நாம் அடையாளம் காண முடிந்தால், இரண்டரை முதல் ஐந்து வயதிற்குள் இதனை குணப்படுத்த முடியும் என்றார்.

அதேவேளை இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய சமூக வைத்திய நிபுணர் ஆசிரி ஹேவாமாலகே, ஆட்டிஸம் மற்றும் நரம்பியல் கோளாறுகள் உள்ள குழந்தைகளை அடையாளம் காண பெற்றோரின் பங்களிப்பும் அவசியம் என்று கூறினார்.

ஆட்டிஸம் என்பது, வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படக்கூடிய சிறிய மாற்றமாகும். குழந்தைகளின் மூளையானது, முதல் ஐந்து வருடக் காலப்பகுதியிலேயே, 80 சதவீதம் வளர்ச்சி அடைகின்றது.

Advertisement

அதனால், அந்த வயதுக் காலத்திலேயே ஆட்டிஸம் நோய் அறிகு​றியைக் கண்டறிந்தால், அவர்களை அந்நிலைமையிலிருந்து மாற்றிக்கொள்வது இலகுவானது.

இல்லாவிடின், குழந்தைகளின் தொடர்பாடல், சமூகத்துடனான நெருக்கத்தைப் போன்று, அவர்களுடைய நடவடிக்கைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

தொடர்பாடல் பிரச்சினை, சமூகச் செயற்பாடுகளின் வீழ்ச்சி மற்றும் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தைச் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம், ஆட்டிஸம் நோயை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version