சினிமா

சினிமாவை விட்டே போகலாம் என நினைச்சேன்..!வீரதீரசூரன் இயக்குநர் ஓபன்டாக்!

Published

on

சினிமாவை விட்டே போகலாம் என நினைச்சேன்..!வீரதீரசூரன் இயக்குநர் ஓபன்டாக்!

தமிழ் சினிமா உலகில் பலரது பாராட்டுகளைப் பெற்ற படமாக நடிகர் விக்ரம் நடித்த வீரதீரசூரன் காணப்படுகின்றது. பாரம்பரியக் கதையை நவீனமாக பேசும் இப்படத்தின் வெற்றிக்கு இயக்குநரின் பங்கு முதன்மை வகிக்கின்றது. அத்தகைய இயக்குநரின் சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.வீரதீர சூரன் பட இயக்குநர் அருண் குமார் ஒரு பிரபல யூடியூப் சேனலில் நேர்காணலுக்கு வருகை தந்து தனது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “எனக்கு சினிமா எப்படி இயக்குவது என்று தெரியாம தான் ஆரம்பித்தேன் என்றும் ஒரு கட்டத்தில் இந்த சினிமா எல்லாம் சரி வராது போலயே!” என்று நினைத்ததாகவும் கூறியுள்ளார்.இப்படியான பின்னணியிலிருந்து இன்று ஒரு பெரிய வெற்றிப் படத்தை அருண் குமார் உருவாக்கியிருப்பது அவரது நம்பிக்கையுடன் கூடிய உழைப்பையே காட்டுகின்றது. அந்நேர்காணலில் நடுவர், அருண் குமாரிடம் “ சினிமா என்றாலே என்னவென்று தெரியாம இருந்த உங்கள மாதிரி ஒருவருக்கு தற்பொழுது இப்படி ஒரு பெரிய பாராட்டு கிடைத்திருக்கின்றது என்றால் மிகப்பெரிய சாதனை” என்று புகழ்ந்துள்ளார்.இந்த வார்த்தைகள் இயக்குநர் அருண் குமாருக்கு மிகவும் உணர்ச்சி பூர்வமானதாக இருந்தது. இந்த நேர்காணலைப் பார்த்த ரசிகர்கள், இயக்குநரின் பேச்சைப் பாராட்டியுள்ளதுடன் தன்னம்பிக்கையின்றி ஆரம்பித்து இன்று வெற்றி வேந்தனாக உயர்ந்துள்ள இயக்குநர்களின் பயணத்திற்கு முன்னோடியாக இவரது உரை இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version