இலங்கை

தேசிய ரீதியாக நடைபெற்ற போட்டியில் 06 தங்கப் பதக்கங்களை சுவீகரித்த கிளிநொச்சி!..

Published

on

தேசிய ரீதியாக நடைபெற்ற போட்டியில் 06 தங்கப் பதக்கங்களை சுவீகரித்த கிளிநொச்சி!..

சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆண்டிற்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான (மாற்றுத் திறனாளிகளுக்கான)  தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி இன்றையதினம் 03.04.2025 மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தேசிய மட்டத்தில் 25 மாவட்டத்திலிருந்தும் இதில் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். 06  தங்கப் பதக்கத்தையும் , 10 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று கிளிநொச்சி மாவட்டம்  தேசிய மட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டது.

Advertisement

குறித்த விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து  21 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றியிருந்தனர். குறித்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், அமைச்சின் செயலாளர்  மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் பங்குபற்றியிருந்தனர். (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version