இலங்கை
பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் CIDயில் மனு சமர்ப்பிப்பு!
பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் CIDயில் மனு சமர்ப்பிப்பு!
பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் விசாரணை ஒன்றைக் கோரி முன்னிலை சோசலிஷக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று மனுவொன்றைச் சமர்ப்பித்து அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார்.
பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தைப் போன்று தற்போதைய அரசாங்கமும் விசாரணைகளை மேற்கொள்ளாமல் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்கின்றமை மிகவும் வருத்தமளிப்பதாக முன்னிலை சோசலிஷக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.[ஒ]