இலங்கை

மாரவில நீதிமன்ற நீதவான் பணி இடைநிறுத்தம்

Published

on

மாரவில நீதிமன்ற நீதவான் பணி இடைநிறுத்தம்

  வழக்கு நடவடிக்கைகளின் போது முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட மாரவில நீதவான் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி மாரவில நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் அசேல சில்வாவை உடனமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்ய நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

மாரவில நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் சிலரால் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்குப் பல முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்ட பின்னரே நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேனவின் தலைமையிலான விசாரணைக் குழு அவருக்கு எதிரான குற்றச்சாட்டுத் தொடர்பில் கடந்த நாட்களில் விசாரணைகளை மேற்கொண்டது.

Advertisement

குறித்த விசாரணை அறிக்கையைக் கருத்திற்கொண்டு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version