இலங்கை

மீண்டும் சர்ச்சைக்குள்ளான நாமல் ராஜபக்சவின் பட்டம்!

Published

on

மீண்டும் சர்ச்சைக்குள்ளான நாமல் ராஜபக்சவின் பட்டம்!

   முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சட்டமாணி பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு முறைக்கேடான வகையில் பரீட்சைக்கு தோற்றினார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சையின் போது நாமல் ராஜபக்ஷ மோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதனை கருத்தில் கொண்ட கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி, இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version