இலங்கை

13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா கைது

Published

on

13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா கைது

பதுளை பண்டாரவளை பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த, சிறுமியின் சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார் என கிராந்துருக்கோட்டே பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி சந்தேக நபரின் வீட்டிற்கு சோளம் கொடுக்கச் சென்றபோது குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

இந்த சம்பவத்திற்குப் பிறகு பாடசாலையில், அவளின் நடத்தையில் மாற்றத்தை கண்ட ஆசிரியர்கள் குறித்த சிறுமியிடம் விசாரித்தபோது இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , 45 வயதுடைய நபர்சந்தேக நபர் நேற்று புதன்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராந்துருக்கோட்டே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version