இலங்கை

கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் மனைவி கொலை ; கணவன் தப்பியோட்டம்

Published

on

கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் மனைவி கொலை ; கணவன் தப்பியோட்டம்

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முவதொர உயன தொடர்மாடி குடியிருப்பில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் இன்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கிராண்ட்பாஸ், முவதொர உயன பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சம்பவத்தன்று சந்தேக நபரான கணவருக்கும் கொலை செய்யப்பட்ட மனைவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த  இளைஞன் ஒருவன் தகராறை சமரசம் செய்ய முயன்றுள்ளார்.

Advertisement

பின்னர் சந்தேக நபரான கணவன் தனது மனைவியையும் சமரசம் செய்த முயன்ற இளைஞனையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி பலமாக காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபரான கணவன் பிரதேசத்தைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version