இலங்கை

தமிழ் கட்சியின் தலைவர்களை சந்தித்த இந்திய பிரதமர்; மாவை, சம்பந்தருக்கு அனுதாபம்

Published

on

தமிழ் கட்சியின் தலைவர்களை சந்தித்த இந்திய பிரதமர்; மாவை, சம்பந்தருக்கு அனுதாபம்

  இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் அரசியல் கட்சியின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும் என தமது எக்ஸ் தளத்தில் இந்திய பிரதமர் , பதிவிட்டுள்ளார்.

Advertisement

மேலும் அவரது பதிவில் ,

பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவிப்பதாக  குறிப்பிட்டுள்ள இந்திய பிரதமர், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் தமக்கு தெரிந்தவர்கள் என பதவிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின் போது மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

தமது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும் என மோடி, எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version