இலங்கை
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுகளில் கிளிநொச்சி முதலிடம்!
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுகளில் கிளிநொச்சி முதலிடம்!
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுப்போட்டியில் 6 தங்கப் பதக்கங்களையும் 10 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்று கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனையீட்டியுள்ளது.
சமூக சேவைகள் திணைக்களத்தால் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை ஹோமகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் 25 மாவட்டத்திலிருந்தும் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இந்தப் போட்டிகளில் முல்லைத்தீவு மாவட்டம் 5 முதலிடங்களையும் 4 இரண்டாமிடங்களையும் 5 மூன்றாமிடங்களையும் பெற்று தேசிய ரீதியில் மூன்றாவது இடத்தைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டம் சாதனை படைத்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் இரண்டு தங்கப் பதக்கங்களையும் மூன்று வெற்றிச் சான்றிதழ்களையும் கைப்பற்றியுள்ளது.