இந்தியா

முதலீடு செய்தால் அதிகவட்டி தருவதாக மோசடி: புதுச்சேரி சைக்கிள் நிறுவனத்தில் இ.டி ரெய்டு

Published

on

முதலீடு செய்தால் அதிகவட்டி தருவதாக மோசடி: புதுச்சேரி சைக்கிள் நிறுவனத்தில் இ.டி ரெய்டு

புதுச்சேரி சைக்கிள் நிறுவனத்தில் துணை இயக்குனர் தலைமையில் 4 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.புதுச்சேரி சாரம் பகுதியில் இயங்கி வரும் சைக்கிள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்திற்கு ஏற்ப வட்டி தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை நம்பி சிலர் முதலீடு செய்த நிலையில் அவர்கள் அசல் வட்டி என எதுவும் தராமல் ஏமாற்றி வந்ததாக சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்தப் புகாரின் பேரில் நேற்று முன்தினம் சைபர் க்ரைம் போலீசார் நடத்திய சோதனையில் அந்நிறுவனம் போலி ஆவணங்கள் வைத்து இயங்கி வருவது தெரிய வந்தது. மேலும், கணக்கில் வராதா ரூ. 2.5 கோடியும் சிக்கியது. இதையடுத்து அதனை அங்கயே சீல் வைத்து இது குறித்து மோசடி வழக்கு பதிவு செய்து வருவாய்துறை தாசில்தார் ப்ரித்திவியிடம் தெரிவித்தனர் இந்த நிலையில், இன்று அந்த சைக்கிள் நிறுவனத்தில் அமலாகத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நான்கு அமலாகத்துறை அதிகாரிகள், வருவாய் துறை மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version