உலகம்

2020 இற்கு பிறகு பங்கு சந்தையில் கடுமையான சரிவை கண்ட அமெரிக்கா’!

Published

on

2020 இற்கு பிறகு பங்கு சந்தையில் கடுமையான சரிவை கண்ட அமெரிக்கா’!

அமெரிக்க பங்குச் சந்தை குறியீடுகள் 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தினசரி சதவீத சரிவைப் பதிவு செய்தன. 

மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வர்த்தக வரிகள் உலகளாவிய மந்தநிலை குறித்த அச்சத்தைத் தூண்டி, முதலீட்டாளர்கள் பத்திரங்கள் மற்றும் யென் போன்ற பாதுகாப்பான சொத்துக்களைத் தேட வழிவகுத்ததால் டாலர் பலவீனமடைந்தது. 

Advertisement

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த (03.04) இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்தார்.

டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதிக்க தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்புக்கு பிறகு அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல் அடியோடு மாறி வருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

இதனால் அமெரிக்க பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடைந்தது. பங்குச் சந்தையின் அனைத்து குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் பல லட்சம் கோடியை இழந்துள்ளன. 

அதேபோல் உலக பங்குச்சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிந்துள்ளன. 

லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version