பொழுதுபோக்கு

எம்.ஜி.ஆருக்காக கடைசி பாடல் எழுதிய கவிஞர்: ஏக்கத்தை தணித்துக்கொண்ட வைரமுத்து; என்ன பாட்டு தெரியுமா?

Published

on

எம்.ஜி.ஆருக்காக கடைசி பாடல் எழுதிய கவிஞர்: ஏக்கத்தை தணித்துக்கொண்ட வைரமுத்து; என்ன பாட்டு தெரியுமா?

கவிஞர் வைரமுத்து பாடல் ஆசிரியராக அறிமுகமானபோது எம்.ஜி.ஆர் சினிமா துறையில் இல்லை என்றாலும், அவருக்கு பாடல் எழுத வேண்டும் என்று விரும்பிய அவருக்கு இறுதியில்,  ஒரு சோகமான காலக்கட்டத்தில் அவருக்காக பாடல் எழுத வைரமுத்துவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.தமிழ் சினிமாவில் கவிப்பேரரசு என்று போற்றப்படுவர் வைரமுத்து பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்கை கொடுத்துள்ள இவர், 1980-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக காளி என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார்.அதன்பிறகு 1986-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் புன்னகை மன்னன் திரைப்படம் தான் இவர்கள் கூட்டணியில் வெளியாக கடைசி படம் என்று சொல்லலாம். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாக இந்த படத்தில், அனைத்து பாடல்களையுமே வைரமுத்து தான் எழுதியிருந்தார். இவர்கள் இருவரும் இணைந்த கடைசி படம் புன்னகை மன்னன் தான் அதன்பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.  இதனையடுத்து இருவரும் தனித்தனியாக தங்களது வேலைகளை பார்க்க தொடங்கிய நிலையில், வைரமுத்து ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள நிலையில், கலைஞர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்த வைரமுத்து அடிப்படையில ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர். ஆனால் இவர் பாடல் ஆசிரியராக அறிமுகமானபோது, எம்.ஜி.ஆர் நடிப்பில் இருந்து விலகிய காலம். இதன் காரணமாக எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுத முடியவில்லை.இதனை நினைத்து ஏங்கிக்கொண்டிருந்த அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. 1977-ல் முதல்வராக அமர்ந்த எம்.ஜி.ஆர் 1987-ல் மரணமடைந்தார். அப்போது எம்.ஜி.ஆருக்கான ஒரு ஆல்பம் தயாரிக்க முடிவு செய்த ஏ.வி.எம்.நிறுவனம் சங்கர் கணேஷ் இசையில் வைரமுத்துவிடம் பாடல் எழுத கேட்டுள்ளனர். அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு ஒரு சில பாடல்களை எம்.ஜி.ஆருக்கான எழுதியுள்ளார் வைரமுத்து.அந்த வகையில் வெளியான ஒரு பாடல் தான் ‘’சந்தன பேழையே சந்தன பேழையே எத்தனை தவங்கள் செய்தாயோ’’ என்ற பாடல். எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பாடிய இந்த பாடல் பல இடங்களில் அவரின் அழுகுரல் ஒலிப்பதை கேட்க முடியும். எம்.ஜி,ஆருக்கு பாடல் எழுத வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த வைரமுத்து இந்த ஏக்கத்தை அவரின் மறைவுக்கு பின் தீர்த்துக்கொண்டுள்ளார்.எம்.ஜி.ஆர் திரையுலகில் கொடிகட்ட பறந்த காலக்கட்டத்தில் அவருக்காக கவிஞர் வாலி பல ஹிட் பாடல்களை எழுதியிருந்தாலும், அவர் இறந்த பின்பு அவருக்காக, கடைசி பாடலை எழுதியவர் கவிஞர் வைரமுத்து.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version