இந்தியா

“சாதி, மதம் கடந்து பெண்களின் சமத்துவத்திற்காக யூனிஃபார்ம் சிவில் கோட் அவசியம்”; கர்நாடக ஐகோர்ட் பரிந்துரை

Published

on

“சாதி, மதம் கடந்து பெண்களின் சமத்துவத்திற்காக யூனிஃபார்ம் சிவில் கோட் அவசியம்”; கர்நாடக ஐகோர்ட் பரிந்துரை

“சாதி மற்றும் மத வேறுபாடின்றி இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களிடையேயும் சமத்துவக் கனவை விரைவுபடுத்துவதற்காக” யூனிஃபார்ம் சிவில் கோடை அமல்படுத்துவதில் மாநில மற்றும் மத்திய அரசுகள் செயல்பட வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. உயிரிழந்த முஸ்லிம் பெண்ணுக்குச் சொந்தமான சொத்தின் வாரிசுரிமை தொடர்பான தீர்ப்பில் இந்த அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஆங்கிலத்தில் படிக்கவும்: Karnataka High Court recommends UCC, says it will ensure ‘equality among women irrespective of caste and religion’ ஏப்ரல் 4 ம் தேதி தனது உத்தரவில், நீதிபதி ஹன்சேட் சஞ்சீவ்குமார், தற்போதுள்ள சட்டத்தின் கீழ் பெண்ணின் சகோதரி தனது சகோதரர்களை விட குறைவான பங்கைப் பெறுகிறார் என்ற சூழலில் சில அவதானிப்புகளையும் கூறினார். இதன் மூலம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இடையே பாகுபாடுகள் நிலவும் சூழல் இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் இது இந்து சட்டத்தின் கீழ் காணப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமின்றி யூனிஃபார்ம் சிவில் கோடை பின்பற்றுவதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடன்பிறந்தவர்கள், 2020 இல் அவரது சொத்தில், கீழ் நீதிமன்றம் வழங்கிய பங்கை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினர். குறிப்பாக, அப்பெண்ணின் சகோதரர்களுக்கு சொத்தில் பங்கு இல்லை எனவும், அப்பெண்ணுக்காக சொத்தை தான் வாங்கியதாகவும், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் வாதிட்டார். 2014 இல் தனது மனைவி இறந்துவிட்டதால், இந்த விவகாரம் வரம்பினால் தடைசெய்யப்பட்டது என்று பெண்ணின் கணவர் மேலும் வாதிட்டார்.ஆசிரியர்களாக இருந்த கணவன் – மனைவி இருவரும் தங்கள் வருமானம் மற்றும் ஓய்வூதியத்துடன் கூட்டாகச் சொத்து சேர்த்ததை நீதிமன்றம் அறிந்து கொண்டது. முஸ்லீம் வாரிசுரிமைச் சட்டத்தின் கொள்கைகளைப் பயன்படுத்தி, இறந்த பெண்ணின் பங்கின் அடிப்படையில் மட்டுமே உடன்பிறப்புகளின் பங்கு கணக்கிடப்படும் என்று நீதிமன்றம் கூறியது.  இவ்வாறு இறந்தவரின் கணவருக்கு 75 சதவீதமும், இறந்தவரின் சகோதரர்களுக்கு தலா 10 சதவீதமும், சகோதரிக்கு 5 சதவீதமும் வழங்கப்படும்.”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவின்படி யூனிஃபார்ம் சிவில் கோட் சட்டத்தை இயற்றுவது, உண்மையான மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு, தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ள குறிக்கோள் மற்றும் அபிலாஷைகளை அடையும். யூனிஃபார்ம் சிவில் கோட் சட்டமும் அதன் அமலாக்கமும் நிச்சயமாக பெண்களுக்கு நீதியை வழங்குகின்றன. அனைவருக்கும் சம அந்தஸ்து மற்றும் வாய்ப்பை எட்டுகின்றன மற்றும் சாதி மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களிடையே சமத்துவக் கனவை துரிதப்படுத்துகின்றன” என்று தெரிவிக்கப்பட்டது.அம்பேத்கர் போன்ற தலைவர்களின் கருத்துகளை நீதிமன்றம் தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவாக மேற்கோள் காட்டியது.யூனிஃபார்ம் சிவில் கோடை சட்டமாக்குவதற்கான முயற்சியை கோருவதற்காக, இந்த உத்தரவின் நகல்களை மாநில மற்றும் மத்திய அரசுகளின் முதன்மை சட்ட செயலாளர்களுக்கு அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version